முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா ப் புகைப்படங்கள்

dimanche 31 janvier 2010

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா பொங்கல் விழா அழைப்பிதழ்

செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் நூற்றாண்டு விழா
பொங்கல் விழா அழைப்பிதழ்





2 commentaires:

  1. தமிழர் புத்தாண்டுப்பொங்கல் விழாவையும் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாட என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைத் தமிழறிஞர் என்று மட்டும் பார்க்காமல் தமிழ் உரிமைக்கான குறியீடாகவே கருதுவதால் தமிழ் அன்பர்கள் உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாவை நடத்துகின்றனர். இந்தியா இலங்கையின் உறவிற்காகத் தமிழர்களைப் பலி கொடுக்கும் என 1960களில் பேராசிரியர் அவர்கள் கவலைப்பட்ட உண்மையின் வேதனையை நாம் இன்றுதான் உணர்ந்துள்ளோம். தொல்காப்பியத்தையும் திருக்குறயளையும் போற்ற வேண்டும் ; சங்கத்தமிழ் நெறியைக் காக்க வேண்டும்; மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் நாம் தமிழர் என உணர வேண்டும் என்ற பேராசிரியர் கொள்கைகளை விழா நேரத்தில் நினைந்து உலகத் தமிழர்கள் உரிமையுடன் வாழ ஒல்லும் வகையில் தொண்டாற்றுவோம். (என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு நன்றி.)அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com

    RépondreSupprimer
  2. செந்தமிழ்க் காவலர் கி. இலக்குவனார் அவர்கள் செய்த தமிழ்ப் பணிகளை தாங்கள் தயவு செய்து இங்கு இணையத்திலும் பட்டியலிட்டால் விழாவிற்கு வரமுடியாத என் போன்றவர்கள், அச்சான்றோனைப் பற்றி தெளிவுற உதவியாக இருக்கும். அல்லது விழாவின் ஒளிஒலி வடிவத்தை இங்கு இட்டாலும் நலம். மிக்க நன்றி.

    RépondreSupprimer